Saturday, 9 January 2016

ஆலயங்களில் உடை கட்டுப்பாடு

ஆலயங்களில் உடை கட்டுப்பாடு


     ஆலயங்களில் உடைக்கட்டுப்பாடு என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகிவிட்ட சூழ்நிலையில், சில கேள்விகள் நம் மனதில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

     பொதுவாக பகுத்தறிவுவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரின் இலக்கும் எப்பொழுதும் இந்து மதமாக மட்டுமே இதுவரை இருந்து வந்திருக்கிறதுஆடைக்கட்டுப்பாடு விஷயத்தில் மீண்டும் அது உண்மை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

     ஆலயங்களில் உடைக்கட்டுப்பாடு என்பது வலியுறுத்தப்பட்டவுடன் மனித உரிமை மீறல், அடிமைத்தனம் என விமர்சனங்கள் முளைக்கின்றனஆனால் கிறித்தவ தேவாலயங்களும், மசூதிகளும் தங்கள் மத வழிபாட்டிற்கென ஆண், பெண்களுக்கு சில உடைகளை வரையறுத்திருக்கின்றனஅவை மதக்கோட்பாடுகள் என ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்து மதம் வலியுறுத்தும்போது மட்டும் அது அடிமைத்தனம் மற்றும் தனி மனித உரிமை மீறலாகிவிடுகிறது.


     பைபிளில், இறை வழிபாட்டில் ஆண், பெண்ணுக்கான உடைகள் வரையறுக்கப்படுகின்றனதேவாலயங்களில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்குமான உடைகளில் கூட கண்ணியம் வலியுறுத்தப்படுகிறதுபேப்டிஸ்ட் சர்ச், பெண்டேகோஸ்ட் சர்ச், மார்மன் சர்ச் உள்ளிட்ட தேவாலயங்கள், அனைவருக்கும் முழங்கால் வரையுள்ள ஆடைகளைத் தவிர்த்து முழுநீள ஆடைகளையே வலியுறுத்துகின்றன.
  

     குரானிலும், இறை வழிபாட்டில் ஆண், பெண் இருவருக்குமான உடை வலியுறுத்தப்படுகிறது. மேலும் உடலில் எந்தெந்த பாகங்கள் வெளியே தெரியலாம் மற்றும் மறைக்கப்பட வேண்டியவை எவையெனத் தெளிவுபடுத்துகின்றது.

     புகழ்பெற்ற சமணக் கோவில்கள் கூட, மிகக்கடுமையான உடைக் கட்டுப்பாடுகளையே கடைபிடிக்கின்றனஉடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை மட்டுமே அணிய அனுமதிக்கின்றனஅதுமட்டுமல்ல, தோலாலான உடைகள், உடைமைகள் அனைத்துமே ஆலயத்திற்குள் தடை செய்யப்படுகின்றன.


     பௌத்த ஆலயங்களும், உடலை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளையே வலியுறுத்துகின்றதுபௌத்த துறவிகள் (Monks) முன்பு ஆண், பெண் இருவரின் தொடுதல்களில்கூட சில வரையறைகள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. தோள்பட்டைகள் மற்றும் கைகள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்பது பௌத்த ஆலயத்தின் கட்டுப்பாடு மேலும் முழங்காலுக்கு கீழே வரையிலான உடைகளே அங்கும் அனுமதிக்கப்படுகின்றன.

     மேற்குறிப்பிட்ட அனைத்து மதங்களும், அவைகளின் வழிபாட்டுத் தலங்களில் ஆடைக்கட்டுபாடுகளை வலியுறுத்துவதன் நோக்கம், வழிபாட்டுத்தலங்கள் புனிதமானவை என்பதால் மட்டுமேஅதுமட்டுமின்றி ஆலயத்தில் இறைவனை மனம் உருகி, மனம் ஒன்றி வழிபட வேண்டும் என்பதாலும், கவனச்சிதறல் ஏற்படக்கூடாது என்பதாலும்கூட. மேலும் ஆடைகளின் கண்ணியம் என்பது ஆண்டவனுக்கு செலுத்தும் மரியாதை என்ற கோட்பாடே இதன் பின்னணியாக உள்ளது

     இந்து மதம் அடிப்படையில், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிரத்தியேக உரிமைகளை அனுமதிக்கிற மதமாகும்அவரவர் விருப்பப்படி வழிபட இஷ்ட தெய்வங்கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் என அனைத்தையும் இந்து மதம் அனுமதிக்கிறதுகடவுளற்ற வாழ்வியலையும் அனுமதிக்கிற ஒரே மதம் இந்து மதம் மட்டுமே.

     அதன் கோவில்கள், கட்டிடச் சிறப்பு வாய்ந்தவை மட்டுமல்ல, அறிவியல் தொழில்நுட்பத்தினாலும் தலைநிமிர்ந்து நிற்பவைஇதன் அறிவியல் ஆன்மாவை ஒடுங்கச் செய்து, ஆன்மீக அலைகளை (Positive Energy) நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பவை

     ஆனால் இப்போதோ இந்துக்களின் கோவில்கள் சுற்றுலாத் தலங்களாகிவிட்டனவெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, உள்ளுர்வாசிகளும் கண்ணியமற்ற உடைகளால் சுற்றுலாத் தலங்களாக கோவில்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை. தொழில்நுட்பத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் நம்மால் இத்தனை பெரிய அறிவியலறிவுடன் கூடிய இதுபோன்ற பிரம்மாண்ட ஆலயங்களை இனி எழுப்ப முடியுமா என்பதுதான் கேள்வி.


     அறிவியல், கலை, ஆன்மீகம் என இம்மூன்றையும் ஒருங்கே தனக்குள் சுமந்து கொண்டு பல நூற்றாண்டுகளைத் தாண்டி நம் முன்னோர் பெருமையை, நம் மண்ணின் மகிமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கோவில்கள், புனிதத்தலங்கள் மட்டுமல்ல, நம் பெருமிதத்தின் அடையாளம்அங்கே கவுரவமான, கண்ணியமான உடையுடன் செல்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்இதன் மூலம் அரங்கேறப்போவது நம் அடிமைத்தனம் அல்ல, நமது பாரம்பரியத்தின் உன்னதமே.  

                                                                      --- இரா. சைலஜா சக்தி










.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}