Monday, 23 May 2016

சிதம்பரம் நடராஜரும் மனித சுவாசமும் (கட்டுரை)

சிதம்பரம் நடராஜரும் மனித சுவாசமும்
மனித உயிர் வாழ்க்கையின் ஆதாரம் சுவாசம் ஆகும். ஆம். சுவாசிப்பதை நிறுத்துகிற மனிதன் உயிரற்றவனாகி விடுகிறான்.
மனித சுவாசம் இருவகைப்படுகிறது.
1)        உள்மூச்சு (inhalation)
2)        வெளிமூச்சு (exhalation)


உள்மூச்சு என்பது வளிமண்டலத்தில் உள்ள காற்று மூச்சுக் குழல் வழியே நுரையீரலை அடைவது. அதாவது நாம் மூச்சை உள்ளே இழுப்பது. உள்ளிழுக்கும் மூச்சில் ஆக்ஸிஜன், கார்பன்டைஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் கலந்துள்ளன. இதில் ஆக்ஸிஜன் மட்டும் இரத்தத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வெளிமூச்சு என்பது நுரையீரலில் இருந்து கார்பன்டைஆக்ஸைடு கலந்த காற்று வெளியே வருவது.


மனித உடலின் சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தர்கள் 96 வேதியியல் மாற்றங்கள் உடலில் நிகழ்வதாக வரையறுத்துள்ளனர். பதிணெண்சித்தர்களில் ஒருவரான திருமூலர் தனது திருமந்திரத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
மனிதன் 4 வினாடிக்கு ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறான். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முறை சுவாசிக்கிறான்.
ஒரு மணி நேரத்திற்கு 900 முறை.
ஒரு நாளைக்கு 21600 முறை.
இந்த சுவாசத்தைப் படிப்படியாக குறைத்தால் மனிதனின் ஆயுட்காலம் கூடும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது 100 ஆண்டுகள்.
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2
முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1
முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0
முறை சுவாசித்தால் மரணமில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும். இதனையே மரணமில்லா பெருவாழ்வு என்பர்)
திருமூலர் உயிர்வாழ்ந்தது இவ்வாறுதான். யோக நிலையில் இருந்தவர் ஆண்டுக்கொருமுறை கண் விழித்து ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்கள் பாடியதாக கூறப்படுகிறது. இப்பாடல்களே திருமந்திரம் எனப்படுகிறது.

நடராஜரின் வடிவம் மனித சுவாசத்தையே குறிக்கிறது. ஒரு கால் தூக்கி , மறுகால் ஊன்றி ஆடுவது என்பது சுவாச ரகசியம். கால் என்றால் மூச்சு எனப்பொருள்.


சிவனின் ஊன்றிய காலுக்குள் இருக்கும் முயலகன்எனும் அரக்கனே மனம். கால் மாற்றி ஆடத் தெரிந்தால் முயலகனைக் கட்டுப் படுத்த முடியும். சுவாசக் கலை தெரிந்தால் மனத்தைக் கட்டுப் படுத்த முடியும்.



எளிமையாகச் சொன்னால், சிதம்பர ரகசியம் என்பது, மனிதனுடைய சுவாசம் இட கலையிலிருந்து , பிங்கலைக்கும், பிங்கலையிலிருந்து, இடை கலைக்கும் இயல்பாக மாறி ஓடும்போது ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் சுழுமுனை நாடி வேலை செய்கிறது. சுழுமுனை நாடி வேலை செய்யும் அந்த இடைவெளிதான் சிதம்பர ரசியம்.

குறிப்பிட்ட இந்த நேரத்தில் எண்ணங்கள் இல்லாமல் மனம் இயல்பாகவே வெறுமை நிலையை அடைகிறது. இந்த வெற்றிடத்தைத் தரிசிப்பவர்களுக்கு, அந்த நிலையிலேயே இருக்க முடிந்தவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கிறது.

ஒரு நாளைக்கு நடக்கக் கூடிய 21,600 சுவாசத்தில் 3000 சுவாசங்கள் இந்த சுழுமுனையில் நடக்கிறது. வையே 3000 தீட்சிதர்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது

சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் சித்சபை 96 தத்துவங்களை உள்ளடக்கியது. இச்சபையில் உள்ள சதாசிவ பீடத்தில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளியுள்ளனர்


இதன் வலதுபுறத்தில் பிரணவ பீடம் உள்ளது. இங்கு 51 மூன்று இதழ்கள் கொண்ட தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ மாலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சுவற்றில் மந்திர அதிர்வலைகளைக் கொண்ட திருவம்பலச் சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த இடமே சிதம்பர இரகசியம் எனப்படுகிறது.



மேலும் நடராசப் பெருமானின் விமானக் கூரையில் பதிக்கப்பட்டுள்ள தங்கஓடுகளின் எண்ணிக்கை 21600. இது மனிதனின் ஒரு நாளின் சுவாச எண்ணிக்கை. தங்க ஓடுகளைப் பதிக்க பயன்படுத்தப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கை 72000.  இது மனித உடலின் நாடிகளின் எண்ணிக்கை.

இன்றைய மருத்துவ அறிவியல் குறிப்பிடும் சுவாசத்தை சித்தர்கள் என்றோ வரையறுத்துவிட்டனர். சிதம்பரம் கோவில் அதன் ஆதாரப்பூர்வமான வடிவமாக திகழ்கிறது.

தமிழனின் விஞ்ஞான அறிவை இனியேனும் தமிழ்கூறும் நல்லுலகம் அறிய வேண்டும். அறிவு மேலை நாடுகளைவிட சொந்த பூமியில் அதிகம் உள்ளது என்பதை உணர வேண்டும்.
-- இரா. சைலஜா சக்தி.






1 comment:

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}