Wednesday, 3 August 2016

பூமித்தாய் (கவிதை)

பூமித்தாய்







நிலம் -
மனிதன் உனக்கு வைத்த பெயா்

உன் மடியில்
ரோஜாவுக்கும் இடமுண்டு
கள்ளிக்கும் இடமுண்டு
மான்குட்டியும் துயில்கொள்ளும்
சிங்கக்குட்டியும் துயில்கொள்ளும்

உன் மடியில்
திருடனும் வாழ்வான்
தியாகியும் வாழ்வான்
மருந்துகளும் உண்டு
மரணங்களும் உண்டு

உன் மடியில்
காதலும் காவியமாகும்
கண்ணீரும் காவியமாகும்
கலைகளும் அரங்கேறும்
கொலைகளும் அரங்கேறும்

உன் மடியில்
வெற்றியும் முத்தமிடும்
தோல்வியும் முத்தமிடும்
யாகங்களும் நிகழும்
யுத்தங்களும் நிகழும்

உன் மடியில்
அரசியலும் வலம்வரும்
ஆன்மீகமும் வலம்வரும்
குடிசைகளும் உருவாகும்
கோபுரங்களும் உருவாகும்

உன் மடியில்
அணுமின்சாரமும் ஆற்றலாகும்
அணுகுண்டும் ஆற்றலாகும்
பூக்களும் உண்டு
பூகம்பங்களும் உண்டு

உன் மீது
அன்புகொண்டால் பூக்கள் பரிசு
அன்புகொன்றால் பூகம்பங்கள் பரிசு

உன்னை
புரிந்துகொண்டால் நீ விளைநிலம்
மறந்துபோனால் நீ தரிசுநிலம்

                  -- இரா. சைலஜா சக்தி

4 comments:

  1. பதிவு அற்புதம்!!

    ReplyDelete
  2. இன்றைய மனிதர்கள் பலரும் பூமித்தாயை விளை நிலமாகப் பார்க்காமல் தரிசு நிலமாகவே மாற்றுகிறார்கள். நறுக்கென எடுத்துக் கூறியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}