Tuesday, 24 January 2017

வாடிவாசல் (கவிதை)

வாடிவாசல் (கவிதை)




நெஞ்சு பொறுக்குதில்லையே....

வீரக்காளைகள்
செய்த பிழைதான் என்ன?

காட்சி விலங்கென்று
கட்டியம் கூறியவர்களை
கூர்தீட்டிய கொம்புகளால்
குத்தி குடல் உருவாததா?

வீரிய காளைகளின்
விந்தழித்து வம்சம்தின்ன
அடிமாடாக்கி ஆர்ப்பரிக்கும்
அந்நிய கைக்கூலிகளை
துவம்சம் செய்து
தூக்கி எறியாததா?

நெஞ்சு பொறுக்குதில்லையே......

தமிழ் காளையர்
செய்த பிழைதான் என்ன?
கரம்கோர்த்த கன்னியரின்
கற்புக்கு காவல் நின்றதா?
பசித்த வயிற்றுக்கு
புசிக்க உணவு தந்ததா?

அசுத்த தேசத்தை
சுத்தம் செய்ததா?
நெரித்த போக்குவரத்தை
நேர் செய்ததா?
துடிக்கின்ற நாடிநரம்படக்கி
வெடிக்காமல் அறம் செய்ததா?
அல்லது
உச்சந்தலையை பதம்பார்த்த
காக்கிசட்டைக்கு உணவு அளித்ததா?

நெஞ்சு பொறுக்குதில்லையே......

வெந்து தணிந்தது
வீர தமிழ்நாடு
வாடிவாசல்
தாண்டா காளைகள்
எம் இதயவாசலை
வாகை சூடின எப்போதோ!!

காட்சி விலங்கான - எம்
காளை தெய்வங்கள்
கண்டம் கடந்தும்
காட்சி கொடுத்தன

கடமையால் வீரன் ஆனான்
கண்ணியத்தால் கதாநாயகன் ஆனான்
கட்டுப்பாட்டால் தலைவன் ஆனான்
தமிழ்த்தாயின் தவப்புதல்வன்


உணர்த்தினான் உலகெலாம் - எம்
தமிழினத்தின் மாண்பை
கவலை வேண்டாம் இளைஞனே!!
உன் வீரம்
உலகு அறியும்
கண்ணீர்
காளைகள் அறியும்
நியாயம்
பூமி அறியும்

காளைகள்
சட்டவாசலை தட்டாதுதான்
ஆனால் தர்மம்
வாடிவாசலை வரவேற்று திறக்கும்
வாடிவாசலை வரவேற்று திறக்கும்

                                 - இரா.சைலஜா சக்தி
.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}