சிதம்பர ரகசியம் – 1
சிதம்பரம் நடராஜரும், ஜெனிவா அணு ஆய்வும்
ஜெனிவாவில்
“ஐரோப்பிய அணு இயற்பியல் ஆய்வுக்கூடம்” (European Centre for
Particle Physics Research) அமைந்துள்ளது. அதன்
தலைமையகத்தின் வாசல் முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராஜர் சிலை 2004ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலை இந்திய அணு சக்தி துறையால் வழங்கப்பட்டுள்ளது.
ஐன்ஸ்டீன் நடராஜர் வடிவத்தைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார் ”All my thoughts on the structure of
the world and its movements find a clear exposition in the image of the Lord
Nataraja”. அதாவது உலக அமைப்பு மற்றும் அதன் இயக்கம் பற்றிய அவருடைய
எண்ணங்களைத் தகுந்த முறையில் வெளிப்படுத்துவது நடராஜர் உருவமே என்கிறார்.
இத்தகு சிறப்பு வாய்ந்த நடராஜர் ஆடல்வல்லானாய் ஆனந்த நடனம் புரியும்
தலம் தில்லை எனப்படும் சிதம்பரம் ஆகும்.
பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம். அதாவது ஆகாயம் என்று சொல்லக்கூடிய
விண்வெளி (Space) தொடர்பான அறிவியல் ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள
தலம். சிதம்பரம் பூமியின் இருதய பகுதியாக குறிப்பிடப்படுகிறது.
காளஹஸ்தி,
காஞ்சிபுரம், சிதம்பரம் இம்மூன்று தலங்களும் கிழக்கு
தீர்க்க ரேகையில் 79E41N அச்சில் ஒரே நேர்கோட்டில்
அமைந்துள்ளன. இது ஒரு விண்வெளி அதிசயமாக கருதப்படுகிறது.
காரணம் என்னவெனில் காளஹஸ்தி பஞ்சபூத தலங்களுள் வாயு (Air) தலம் (Air). காஞ்சிபுரம் மண் (Earth) தலம். சிதம்பரம் ஆகாய (Space) தலம்.
ஆக பஞ்சபூத தலங்கள் என நமது முன்னோர்கள் குறிப்பிட்ட தலங்களில்
மூன்று தலங்கள் பூமியின் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.
இதுவே நம்மவர்களின் விண்வெளி அறிவுக்கு மிகப்பெரிய சான்று.
இதில் சிதம்பரம் கோவில் ஒரு விஞ்ஞானப் பெட்டகம் ஆகும். சிதம்பர ரகசியம் என்பது
சிதம்பரம் கோவிலில் புதைந்துள்ள விஞ்ஞான உண்மைகளே.
இவ்வாலயத்தில் உள்ளவை அனைத்துமே அறிவியல் பூர்வமானவை.
அவற்றில் முக்கியமானது கோவிலின் கட்டிட அமைப்பு. இது ஒரு மனித உடலுடன் குறிப்பாக ஒரு
யோகியின் உடலுடன் ஒத்திருக்கிறது.
இன்றைய மருத்துவ அறிவியல் அனாடாமி (Anatomy) என்ற பெயரில் மனித
உடல் பாகங்களை வரையறுக்கிறது. ஆனால் மெய்ஞானம் கண்ணுக்கு புலப்படும்
உறுப்புகளுடன், கண்களுக்குப் புலப்படாத உடற்சக்கரங்களையும் வரையறுக்கிறது.
மனித உடலில் மொத்தம் ஏழு உடற்சக்கரங்கள்
உள்ளன. இந்த சக்கரங்கள் தாமரை வடிவம் கொண்டவை. ஒவ்வொரு
சக்கரத்திற்கும் ஒரு தெய்வம், மந்திரம்,
நிறம் ஆகியவை உண்டு. பஞ்ச பூதங்களான நிலம்,
நீர், காற்று,
நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றுடன் ஒவவொறு சக்கரமும் தொடர்பு
கொண்டுள்ளது.
1)
முதல் சக்கரம் மூலாதார சக்கரம் ஆகும்.
இது ஆண்கள்
உடலில் சிறுநீர் துவாரத்திற்கும் மலத்துவாரத்திற்கும்
நடுவே உள்ள இடைவெளியில்
அமைந்துள்ளது. பெண்கள்
உடலில் பெண் உறுப்பின்
உட்புறம் கருப்பைவாசல்
அருகில் உள்ளது.
2)
மூலாதாரச்சக்கரத்திற்கு
மேலே, சுமார்
நான்கு விரல் இடைவெளியில் இரண்டாவது சக்கரமான சுவாதிஷ்டானம்
உள்ளது.
3)
மூன்றாவது சக்கரமான மணிபூரகம்
நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.
4)
நான்காவது சக்கரமான அனாகத சக்கரம் இதயத்துக்கு
நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.
5)
ஐந்தாவது சக்கரமான விசுத்தி சக்கரம்
கழுத்தின் மையப்பகுதிக்கு பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.
6)
ஆறாவது சக்கரமான ஆக்ஞா
சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில்,
இரு புருவ மத்தியின்
பின்புறம் அமைந்துள்ளது.
7)
ஏழாவது சக்கரமான சகஸ்ராரம் தலையின்
மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.
இவற்றில்
மூலாதாரமானது நிலத்துடனும், சுவாதிஷ்டானம்
நீருடனும், மணிபூரகம் காற்றுடனும்,
அனாகதம் நெருப்புடனும், விசுக்தி
ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.
சிதம்பரம் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம், மனித தலையில் ஆயிரம் இதழ்களுடன்
விளங்கும் ஏழாவதான சகஸ்ரார சக்கரத்தை ஒத்துள்ளது. இங்குள்ள சிவகங்கை
தீர்த்தம் மூளையின் பீனியல் சுரப்பியின் (Pineal Gland) அமைவிடத்தை
ஒத்துள்ளது.
ஆயிரங்கால் மண்டபத்திற்கும் சிற்சபைக்கும் மத்தியில் முகப்பு
மண்டபம் அமைந்துள்ளது. இது நமது இரு புருவ மத்தியின் பின்புறம்
அமைந்துள்ள ஆறாவது சக்கரமான ஆக்ஞா சக்கரத்தை குறிக்கிறது. விளக்கமாகச்
சொன்னால் இது பிட்யூட்டரி சுரப்பியை (Pituitary Gland) குறிக்கும்.
ஆயிரங்கால் மண்டபத்தின் தென்புறம் ஸ்ரீகுரு மூர்த்தியும் ஜோதிலிங்கமும்
அமைந்துள்ள இடம் ஐந்தாவது சக்கரமான விசுத்தி சக்கரத்தின் அமைவிடத்தை ஒத்துள்ளது.
சிற்சபையும்,
பொற்சபையும் நான்காவது சக்கரமான அநாகத சக்கரம் இருக்குமிடத்தைக் கொண்டுள்ளது.
கோவிந்தராஜர் எழுந்தருளியுள்ள இடம், மூன்றாவது சக்கரமான மணிபூரக
சக்கரத்தின் இருப்பிடமாகும்.
ஊர்த்துவ தாண்டவ மூரத்தி எழுந்தருளியுள்ள சன்னதி, இரண்டாவது சக்கரமான சுவாதிட்டான
சக்கரத்தின் அமைவிடமாகும்.
இறுதியாக கணபதி எழுந்தருளியுள்ள இடம் முதல் சக்கரமான மூலாதாரச்
சக்கரத்தின் ஸ்தானமாகும்.
மனித உடலில் சுவாசமானது மிக முக்கியமான மூன்று நாடிகளால் நடைபெறுகிறது. முதுகுத் தண்டின் இடப்பக்கமாக
இடது கால் பெருவிரலில் துவங்கி சிரசு வரை இயங்குவது இடகலை எனப்படும்
.முதுகுத் தண்டின் வலப்பக்கமாக, வலது கால் பெருவிரலில்
துவங்கி சிரசு வரை இயங்குவது வடகலை எனப்படும்.
மனித உடலின் முதுகுத்தண்டின் நடுவிலிருந்து
தலை உச்சி வரை இயங்குவதே சுழுமுனை எனப்படும்.
பூமியின் இதயமாகத் திகழும் சிதம்பரம், இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும்
மையமாக திகழ்கிறது. இந்த மையமே மனித உடலில் இறைவன் வாசம் செய்யும்
ஆன்மீக பகுதியாகும். ஆகவேதான் சிதம்பரம் ஆகாய தலமாக அறிவிக்கப்பட்டு
இறைவனின் நேரடித் தொடர்புடைய தலமாக கருதப்படுகிறது.
சிதம்பரம் = சித் + அம்பரம்
சித் – ஞானம்,
அம்பரம் – ஆகாயம்
அதாவது ஞானமயமான இறைவன் ஆகாயத்திலே
திருநடனம் புரியும் தலமே சிதம்பரம் எனப்படுகிறது.
இறைவன் நடனம் புரிபவனாக இந்து மதம் சித்தரிப்பதன் காரணத்தைக்
கண்டு மேலைநாட்டு விஞ்ஞானம் வியக்கிறது.
ஜெனிவாவில் செப்டம்பர் 10, 2008ல் மிகப்பெரிய அறிவியல்
சோதனை நடத்தப்பட்டது. மிகப் பெரிய வட்டமான சுரங்கத்திற்குள் எதிர்
எதிர் புரோட்டான் கதிர்களை அதிவேகத்தில் மோத வைத்து அதன் விளைவுகளை ஆராய்தல்.
மேலும் இது கடவுளின் அணுத்துகள் (God’s Particle) என்று சொல்லப்படும் ஹிக்ஸ் போஸானை (Higgs Bosson) அறியும்
முயற்சியாகவும் இருந்தது.
இயற்பியல் வல்லுனரான பிரிட்ஜாப் காப்ரா, நவீன இயற்பியல் அறிஞர்களுக்கு
சிவதாண்டவம் என்பது ஒரு அணுவின் தாண்டவமே என்கிறார். பண்டைய இந்தியர்கள்
இத்தாண்டவத்தை வெண்கல சிலைகளாக உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ
அதி நவீன சாதனங்களைக் கொண்டு இத்தாண்டவத்தை நிகழ்த்துகின்றனர் என்கிறார்.
தோன்றுவதும்,
இயங்குவதும், ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படை
என்பதே நவீன விஞ்ஞானம்.
இதுவே தாண்டவம் என இந்து மதம் சொல்கிறது. இத்தாண்டவத்திற்கு நம் முன்னோர்
கொடுத்த வடிவமே நடராஜர். இறைவனின் ஆனந்த நடனமே உலக இயக்கத்தின் அச்சாக உள்ளது என்பதே அதன் உட்கருத்து.
இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்து வெளியிட்டுக் கொண்டிருக்கும்
உண்மைகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து சொன்ன நம் முன்னோர்களின் பெருமையை
இனியாவது அறிவோமாக.
எனவே ஆலயங்களை ஆன்மீகம் மட்டுமே உள்ள தலங்கள் என நினைத்து இளைய
தலைமுறையினர் ஒதுக்க வேண்டாம். ஆலயங்கள் பிரம்மாண்டமான அறிவியல்
தலங்கள் என்பதைக் கண்டுணர்வீர்களாக.
--இரா. சைலஜா சக்தி
அற்புதமான ஆழ்ந்த தேடலுடனான பார்வை .
ReplyDeleteஆனால் மிக காலதாமதமாக வாசிக்கிறேன்.
அற்புதமான ஆழ்ந்த தேடலுடனான பார்வை .
ReplyDeleteஆனால் மிக காலதாமதமாக வாசிக்கிறேன்.