24.06.2016 இரா.சைலஜா
சக்தி
போர் ஆயுதம்
ஒரு
ஜென் துறவி தன் இளமைக்காலங்களில் மிகச் சிறந்த போர் வீரராக இருந்தார். படைகளுக்கு தலைமையேற்று பல போர்களில் வெற்றி கண்டார். பின் துறவு மேற்கொண்டார்.
அவரது இரு சீடர்கள், அவரின் கடந்த காலம் பற்றி
விசாரித்தனர்.துறவியோ “அமைதியும்,புத்திக்கூர்மையும் தான் உண்மையான ஆயுதங்கள் என உணர்ந்தேன். அதனால்தான் மற்ற ஆயுதங்களை கீழே போட்டு விட்டேன்” என்று
கூறி சென்று விட்டார்
சீடர்களால்
நம்ப முடியவில்லை. மறுநாள் குருவை சோதித்துப் பார்ப்பதென முடிவு செய்தனர். குரு தியானத்தில்
இருந்தார். சீடர்கள் இருவரும் கையில் ஆயுதங்களோடு அவரை தாக்க காத்திருந்தனர். குரு
ஆழமான தியானத்திற்குள் சென்றதை அறிந்ததும் அவரை நோக்கிப் பாய்ந்தனர். குருவோ கண்களை
திறக்காமல் கொஞ்சம் முன்னாடி நகர்ந்து கொண்டார். அவரைத் தாக்க பாய்ந்த சீடர்களோ தரையில்
குப்புற விழுந்தனர். சீடர்கள் எழுந்து குருவைப் பார்த்தனர். அவர் அமைதியுடன் தியானத்தை
தொடர்ந்திருந்தார்.
இங்கு
குரு புத்திகூர்மையுடன் நகர்ந்ததால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். அவர் கண்களை திறக்கவோ,
எதிர்தாக்குதல் புரியவோ இல்லை. அடிப்படையில் போர்வீரரான அவரால் சுலபமாக சண்டையிட்டு
ஜெயித்திருக்க முடியும். சீடர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் குருவின் இலக்கோ
தியானம் மட்டுமே. எனவே தனக்கு வந்த சின்ன இடையூறை அவரின் புத்திசாலித்தனத்தால் சமாளித்துவிட்டு
மீண்டும் தியானத்தை தொடர்ந்தார். வீணாக சண்டையிட விரும்பவில்லை.
இது
நம்மால் முடியுமா? புத்திகூர்மை நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் புத்தி வேலை செய்வதற்குள்,
உணர்ச்சிகள் நம்மை ஜெயித்து விடும். அந்த குரு இடத்தில் நாம் இருந்தால் முதலில் சீடர்களை
துவம்சம் செய்து விட்டுதான் மறுவேலை. விழுந்த அறையில் அவர்கள் ஆசிரமத்தை
விட்டே ஓடி இருப்பார்கள். தேவையில்லாமல் தொந்தரவு செய்யும்போது உணர்ச்சிவசப்படுவதுதானே
மனித இயல்பு?
இலக்கை
நோக்கி பயணிப்பவன் இடையூறுகளை கண்டு அஞ்சமாட்டான். இடையூறுகளுக்கு செலவிடும் ஆற்றல்
வெற்றிப்பாதையின் வேகத்தைக் குறைக்கும். இதை அறிந்ததால்தான் அந்த குரு அலட்டிக் கொள்ளவில்லை.
காந்தியடிகள் அகிம்சையால் ஆங்கிலேயர்களை விரட்டியதும் இப்படித்தான். உடல்நோய் என்ற
மாபெரும் இடையூறு தொடர்ந்த போதும் புகழ்பெற்ற பாஸ்கல் விதியை உருவாக்கினார் கணிதவியல்
வல்லுநரான பாஸ்கல். வறுமை துரத்தியபோதும் கவிதை பாடிக் குவித்தார் பாரதி. இடையூறுகள்
வாழ்வில் எந்த வடிவில் வந்தாலும் அதை தங்கள் அறிவால் உதறித்தள்ளுபவர்களே இறுதியில்
வெற்றி பெறுகிறார்கள்.
ஒரு
கல்லூரியின் பெண்கள் விடுதிக்குள் மாணவர்கள் சென்று வருவது அக்கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு
வந்தது. அவர் மாணவர்களை அழைத்தார். விடுதிக்குள் ஒருமுறை நுழைந்தால் அபராதம் ரூ500,இரண்டாம்
முறை எனில் ரூ1000,மூன்றாம் முறை எனில் ரூ1500 என கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
அதைக்கேட்ட ஒரு மாணவன் எழுந்து “அப்போ சீசன் டிக்கெட் எவ்வளவு சார்?” என்றான். என்னே
நமது மாணவனின் புத்திகூர்மை!!!.
No comments:
Post a Comment